Tuesday, April 14, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் சொல்லும் அறிவுரை


நாடு எதிர்கொண்டிருக்கும் கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.
மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட பிரதமர் மோடி, இந்த ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்களை பட்டியலிட்டிருந்தார்.
அதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றலாம் என்று தெரிவித்திருந்தார்.

அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் தெரிவிக்கும் சில விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
அன்றாடம் நாம் சில விஷயங்களைக் கடைப்பிடித்து நாம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
அதாவது,
வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள்.
தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா மற்றும் பிரணயாமம் செய்ய வேண்டும்.
உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் உள்ளன.
சயவன்பிராஷ் மருந்தை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட வேண்டும்.
சுக்கு, மிளது, திப்பிலி போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு அருந்தலாம்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் ஒரு சில சொட்டுகளை தினமும் காலை மற்றும் மாலையில் மூக்கில் விட வேண்டும்.
நல்லெண்ணெய் அல்லது தேங்காய எண்ணெயை வாயில் போட்டு கொப்பளிக்கலாம். இதை செய்து முடித்ததும் வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News