Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 23, 2020

சென்னையில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரண பாக்கெட்! - தமிழக அரசு முடிவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னையில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கபசுர குடிநீர் சூரணம் பொட்டலைத்தை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வேகமாக பரவும் காரணத்தால் சென்னை அண்ணா சாலை மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியே நடமாடுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தயாரிக்கத் தேவையான பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதியில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் என்பது கொரோனாவைத் தடுக்கும் மருந்து இல்லை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News