Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 4, 2020

விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!


பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களிலும் உடலைச் சுற்றிலும் இருக்கும் ஒருவகையான காந்த சக்தி அல்லது காந்த புலம் கொண்ட அமைப்பு "ஆரா" என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் "பயோஎனர்ஜி" எனப்படும்.மனித உடலில் உள்ள உறுப்புகளை தோல் எவ்வாறு பாதுகாக்கிறதோ, அதுபோன்று நமது உடல் முழுவதையும் ஆரா என்கின்ற காந்தப்புலம் காக்கிறது. நீங்கள் தரையிலோ அல்லது இருக்கையிலோ அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு இரு கரங்களையும் இடுப்போடு ஒட்டியவாறு வைத்து முன் கைகள் மட்டும் முன்புறம் நீட்டி வைத்துக்கொள்ளுங்கள் (கைதட்டல் போன்ற அமைப்பு). சரியாக இரு கைகளும் 30 செ.மீ., இடைவெளியில் விரல்கள் அனைத்தும் சேர்ந்தவாறு இரு கைகளையும் மெதுவாக அருகில் தொடுவது போன்று வந்து மீண்டும் மெதுவாக விலக்குங்கள்.இதை தொடர்ச்சியாக முன்பின் உள்ளங்கை இரண்டும் தொடுவது போன்று நீங்கள் செய்து பார்க்கும் பொழுது உங்கள் கைகளில் காந்த சக்தியை உணர முடியும்.
நீங்கள் வெளியில் சென்று வரும் பொழுது எண்ணற்ற கிருமிகள், தீய செல்கள், நெகட்டிவ் எனர்ஜி ஆகியவை ஆரா காந்த சக்தியில் ஒட்டிகொண்டு நம்மோடு வீட்டுக்குள் நுழையும். அதை தடுக்கும் விதமாக, நமது கலாசாரத்தில் கைகளையும் கால்களையும் கழுவிய பின்பே வீட்டிற்குள் நுழைவது வழக்கம். இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று வந்தால் ஆடைகளை நனைத்து குளிப்பதும் அதனால் தான்.நெருப்பினால் சுத்தம் மனித உடலை சுற்றி உள்ள இந்த ஆராவை நெருப்பினாலும் சுத்தம் செய்யலாம். திருமணம் முடிந்து அல்லது மருத்துவமனையில் பிரசவம் முடிந்து தாயும், சேயும் வீட்டுக்குள் நுழையும் போது அவர்கள் உடலைச் சுற்றியுள்ள கிருமிகளை நீக்கும் விதம் முன்னோர்கள் ஒரு தட்டில் மஞ்சள் தண்ணீர், சுண்ணாம்பு ஒரு வெற்றிலையில் வைத்து சூடத்தை ஏற்றி நெருப்பினால் உடலை மூன்று முறை சுற்றுவர். ஆராவை தீயினால் சுத்தம் செய்வதற்கு "ஆரத்தி" என்று பெயர்.
அரசியல் தலைவர்களுக்கு ஆரத்தி எடுப்பதன் பின்னணியும் இதுவே.கார்த்திகை தீபம் கார்த்திகைக்கு வீட்டின் முகப்பு பகுதியில் தீபம் ஏற்றுவதால் அந்த வீட்டைச் சுற்றியுள்ள கிருமிகள் அழிக்கப்படும் என்பது தீப ஒளி ஏற்றுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஞ்ஞானம்.நாம் ஏன் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்றால் எண்ணற்ற விளக்குகளில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு விதமான மருத்துவ குணம் உண்டு. அனைத்து வகையான எண்ணையை பயன்படுத்தி விளக்குகள் ஆலயங்களில் எந்த நேரமும் எரிந்து கொண்டிருப்பதால் அதிலிருந்து "ஈதர்" என்ற ஒரு பஞ்சு போன்ற நெருப்பு படலம் நமது ஆராவை சுத்தம் செய்து உடலுக்கு சக்தியை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. இதேபோல நாளை இரவு 9:00 மணிக்கு பிரதமர் கேட்டுக்கொண்டதின் பேரில் வீடுகளில் தீப ஒளி ஏற்ற உள்ளோம்.வீட்டைச்சுற்றி விளக்குகளில் ஏற்றப்படும் அந்த தீபத்தாலக ஈதர் என்ற நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. மனித உடலை ஒட்டியுள்ள அந்த காந்தப் புலத்தை, ஆராவை சுத்தம் சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான விஞ்ஞான முறையே தீபமேற்றல்.இந்த தீப ஒளி ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆராவையும் சுத்தம் செய்யும் "பாரத ஆரத்தி"என்றே கருதுகிறேன்.- பேராசிரியர் வி. தமிழ்நாயகன் பழநி.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News