Monday, April 13, 2020

குழந்தைகளின் கண்களை பாதிக்கும் விஷயங்கள்


சிறுவயதில் கண்களைச் சில குழந்தைகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்களில் சிவப்பு மற்றும் நீர் வடிதல் இவையும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. டெடி பியர் போன்ற மென் பஞ்சு இழைகளாலான பொம்மைகள், தலையணை, மெத்தையில் இருந்து வரும் தூசி, நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் சிறிய ரோமங்கள் இவையே இத்தகைய ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய காரணிகள்.
இதுபோக ஜன்னல், மின்விசிறி, ஏசியில் ஒட்டியிருக்கும் தூசுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்கள், நகக்கண்களில் தேங்கியிருக்கும் அழுக்குகள், வீட்டைச் சுற்றி இருக்கும் பார்த்தீனியம் செடியின் மகரந்தத்தூள் இவையும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
6 மாதத்திலிருந்து 5 வயது வரையிலான உள்ள சிறார்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு வைட்டமின் ஏ திரவத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அங்கன்வாடியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதைத் தவறாமல் குழந்தைக்கு அளிக்க வேண்டும். கேரட், கீரை, பப்பாளி, மீன் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். இவை தடுப்பு நடவடிக்கைகள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News