Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 24, 2020

இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள் பின்வருமாறு:-

🍄அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

📒 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் - பகுதி III
📒 அடிப்படை உரிமைகள் விதி 12 - 35
📒 விதி க்கு வேறுபெயர் ஆங்கிலத்தில் - Art
📒 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது - அமெரிக்கா
📒 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை - சொத்துரிமை
📒 சொத்துரிமை பற்றி கூறும் விதி - 31
📒 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது - 44 ச.தி. (1978)
📒 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி - 300A
📒தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் - 6

1. சமத்துவ உரிமை (விதி 14 - 18)
🔺விதி 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
🔺விதி 15 - சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை
🔺விதி 16 - அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
🔺விதி 17 - தீண்டாமை ஒழிப்பு
🔺விதி 18 - பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)

2. சுதந்திர உரிமை (விதி 19 - 22)
🔺விதி 19 - உரிமைகள்
* பேச்சுரிமை
* சங்கம் அமைக்கும் உரிமை
* இந்தியவில் எங்கும் செல்ல உரிமை
* இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை
* எந்த தொழிலையும் செய்யும் உரிமை
* ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை
🔺விதி 20 - குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
🔺விதி 21 - தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை
🔺விதி 22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 - 24)
🔺விதி 23 - சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை
🔺விதி 24 - குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது

4. மத உரிமை (விதி 25 - 28)
🔺விதி 25 - 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு

5. கல்வி கலாச்சார உரிமை (விதி 29 - 30)
🔺விதி 29 - சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை
🔺விதி 30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை

6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை - (விதி 32)
🔺விதி 32 - இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்

இந்த விதி கூறும் பேராணைகள்- 5

1.ஹேப்பியஸ்கார்பஸ் - ஆட்கொனர் நீதிபேராணை
2. மான்டமஸ் - செயலுறுத்தல் நீதிபேராணை
3. ப்ரோஹிபிசன் - தடையுறுத்தும் நீதிபேராணை
4. கோவாரண்ட் - நெறிமுறையுறுத்தல் நீதிபேராணை
5. செர்சியோரைய - தகுதி முறை வினவும் நீதிபேராணை

🍄அரசு நெறிமுறை கொள்கைகள்:-

🏛 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
🏛 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
🏛 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
🏛 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
🏛 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b), 39(d), 39(e), 41, 42, 43(A), 45
🏛 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
🏛 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
🏛 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
🏛 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
🏛 விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
🏛 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
🏛 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
🏛 விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
🏛 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
🏛 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
🏛 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
🏛 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
🏛 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
🏛 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
🏛 விதி 51 - உலக அமைதியில் நாட்டம்

🍄குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-

🏛 விதி 52 - குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 53 - குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்
🏛 விதி 54 - குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 55 - குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை
🏛 விதி 56 - குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 57 - குடியரசு தலைவர் மறுநியமணம்
🏛 விதி 58 - குடியரசு தலைவர் தகுதிகள்
🏛 விதி 60 - குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி
🏛 விதி 61 - குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 62 - குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்
🏛 விதி 63 - துணை குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 64 - துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி
🏛 விதி 65 - குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்
🏛 விதி 66 - துணை குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 67 - துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 69 - துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்
🏛 விதி 67b - துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 72 - குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்

🍄பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை
🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
🏛 விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
🏛 விதி 110 - பணமசோதா
🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
🏛 விதி 112 - பட்ஜெட்
🏛 விதி 117 - நிதி மசோதா
🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்

மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-

🏛 மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை
🏛 விதி 152 - மாநிலம் என்பதை வரையறை
🏛 விதி 153 - மாநில ஆளுநர் பதவி
🏛 விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்
🏛 விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்
🏛 விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 157 - ஆளுநரின் தகுதிகள்
🏛 விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News