Wednesday, April 22, 2020

மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படாததால், இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்தது. மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்படுவது கடந்த மார்ச் மாதமே துவங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அச்சகங்கள் ஏதும் செயல்படவில்லை. அதனால் மாணவர்களுக்கு இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில், 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் புது புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ள லிங்க்கை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.
http://tnschools.gov.in/textbooks

1 comment:

Popular Feed

Recent Story

Featured News