Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் மழை காலங்களில் மீண்டும் முழுவீச்சில் பரவும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஷிவ் நடார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விஞ்ஞானியுமான சமித் பட்டாச்சாரியா, இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்கள் கூறியதாவது, "இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலை இன்னும் சில மாதங்கள் வரை தொடரலாம். அதன் பிறகு கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், மழை காலத்தில் இரண்டாவது முறையாக ( Second Wave) கரோனா வைரஸ் முழு வீச்சில் பரவும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மிகத்தீவிரமாக பரவும் அபாயம் உள்ளது. அப்படியான நேரங்களில் நாம் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும். கரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனாவால் பாதிப்படைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 24,504. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775. அதே போல குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5063 என்பது குறிப்பிடத்தக்கது.
IMPORTANT LINKS
Saturday, April 25, 2020
Home
பொதுச் செய்திகள்
"இந்தியாவில் கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் மழை காலங்களில் மீண்டும் முழுவீச்சில் பரவும் அபாயம் உள்ளது!" - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
"இந்தியாவில் கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் மழை காலங்களில் மீண்டும் முழுவீச்சில் பரவும் அபாயம் உள்ளது!" - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment