Wednesday, April 29, 2020

ஊடக நிறுவனங்களுக்கு ஓர் ஆசிரியரின் மனம் திறந்த மடல்


இன்றைக்கு
ஊடகத்துறையில் வளர்ந்து நிற்கும்
பெரிய தொலைக்காட்சிகள்.
பத்திரிக்கை நிறுவனங்கள் என
அனைத்தின் வியத்தகு வளர்ச்சிக்குப் பின்னாலும்,
அவற்றில் பணிபுரியும்
செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், பணியாளர்கள்
எனப் பலருடைய அர்ப்பணிப்பும், வியர்வைத்துளிகளும் கலந்துள்ளது என்பது
மறுக்கமுடியாத உண்மை..
கொரோனாவினால் இன்றைக்கு
அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதைப்போல ஊடகத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது..
இந்த நேரத்தில்
தமது பணியாளர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமையாகும்..இது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்போற்றப்படும் ஊடகத்தைக் காக்கும் செயலாகும்.
இந்த நேரத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி, ஊதியக்குறைப்போ,
பணிக்குறைப்போ என எதுவும் செய்யாமல் அனைவரையும் தாயைப்போல அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் அறமாகும்..
தாம் பணிபுரியும் ஊடகத்தை
தமது உயிராய்,உணர்வாய்க் கட்டிக்காத்தவர்களைக் காத்துநிற்க வேண்டியதே இந்த நேரத்தில்
ஊடகங்களின் தலையாய கடமையாகும்...
தர்மம் தலை காக்கும்
சிகரம்சதிஷ்குமார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News