Wednesday, April 15, 2020

எளிய முறையில் மாஸ்க்குகளை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவது எப்படி? பயனுள்ள டிப்ஸ்!


கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகத்தில் மாஸ்க்குகளை அணிவிக்க வேண்டுமென சுகாதார ஆணையம் மற்றும் அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
மேலும் மாஸ்க்குகளின் தேவை அதிகமாகி வருகிறது. இதனால் பலர் வீட்டிலேயே தங்களுக்கு தேவையான மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தகைய மாஸ்க்குகளை சுத்தம் செய்து மீண்டும் எவ்வாறு பயன்படுத்துவது என்ற எளிமையான டிப்ஸினை நமது அரசு ஒரு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளது. அதன்படி செய்ய வேண்டிய வழிமுறைகள்:

1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய மாஸ்க்குகளை கீழ்கண்டவாறு சுத்தம் செய்து பயன்படுத்தக் கூடாது.
2. மீண்டும் பயன்படுத்த முடிந்த மாஸ்க்குகளை கீழ்கண்டவாறு சுத்தம் செய்து பயன்படுத்தலாம்:
- வெதுவெதுப்பான நீரில் சோப்பினை கலந்து மாஸ்க்குகளை அதில் ஊற வைத்து துவைக்க வேண்டும்
- அதன் பின்னர் சூரிய வெளிச்சத்தில் 5 மணி நேரம் காய வைக்க வேண்டும்.

- சூரிய வெளிச்சத்தில் காய வைக்க முடியவில்லையென்றால், தண்ணீரில் உப்பினை கலந்து மாஸ்க்கினை அதில் போட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்னர் மாஸ்கினை வெறும் குக்கரில் போட்டு சூடு செய்து காய வைக்க வேண்டும்.
- குக்கர் இல்லாதபட்சத்தில் மாஸ்கினை சேப்பு கலந்து துவைத்துவிட்டு அயன் பாக்ஸ் மூலம் 5 நிமிடம் நல்ல சூட்டில் அயன் செய்ய வேண்டும்.
இந்த தகவலினை இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் திரு விஜயராகவன் இந்திய அரசுக்கு வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News