Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 26, 2020

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. * மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம். * அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர்உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கைத்தாயே! மூவரும், தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே!
பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்டஐஸ்வர்யங்களையும்வாரி வழங்குவாயாக.* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே!
தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயக்கமலத்தில் வாழ்பவளே! நிலவு போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே!
குறையில்லாத வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே!
வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெல்லாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News