Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 24, 2020

Group 1&2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்! (50 + 50 வினாவிடை)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


1.மென்கிர் என்பது எம்மொழிச் சொல் ?

A) கிரேக்கம்
B) லத்தீன்
C) பிரிட்டன்🎈
D) பிரெஞ்சு

2. சரியான கூற்றை தேர்ந்தெடு

I) சமண சமயம் 23 தீர்த்தங்கரர்களை கொண்டது.
II) வர்த்தமானர் பீகாரின் பவபுரியில் பிறந்தார்.
III) சமணம் என்னும் சொல் ஜனா சமஸ்கிருத சொல்லில் இருந்து பிறந்தது.
IV) ஜனா என்பதன் பொருள் தன்னையும் வெளியுலகையும் வெல்வது என்பதாகும்.

A) I&II சரி
B) I&III சரி
C) III&IV சரி
D) அனைத்தும் தவறு🎈

3.வர்த்தமானர் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ எத்தனை கொள்கைகளை போதித்தார் ?

A) மூன்று
B) நான்கு
C) ஐந்து🎈
D) ஆறு

4. பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகை எங்கு உள்ளது ?

A) அரிட்டாபட்டி🎈
B) கீழக்குயில்குடி
C) பொருந்தல்
D) புலிமான் கோம்பை

5.அறவோர் பள்ளி என்பது சமணர்கள் வாழ்ந்த இடம் எனக் குறிப்பிடும் பண்டைய நூல் எது ?

A) ஆகமசித்தாந்தம்
B) சிலப்பதிகாரம்
C) பதிற்றுப்பத்து
D) மணிமேகலை🎈

6.ஜைனக்காஞ்சி என்று அழைக்கப்படும் கிராமம் ?

A) சித்தன்னவாசல்
B) திருபருத்திக்குன்றம்🎈
C) சிதாறல் மலைக்கோயில்
D) கீழக்குயில்குடி

7.சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர்?

A) திகம்பரர்
B) வர்த்தமானர்
C) சித்தார்த்தர்🎈
D) ரிஷபதேவர்

8.எந்த மதத்தின் போதனைகள் நான்கு பேருண்மைகளையும் எட்டு நெறிகளையும் கொண்டுள்ளது ?

A) சமணம்
B) பௌத்தம்🎈
C) கான்பூசியஸ்
D) ஜொராஸ்டிரியம்

9.பேரரசர் அசோகரின் ஆணைகள் எத்தனை ?

A) எட்டு
B) இருபத்திரண்டு
C) பதிமூன்று
D) முப்பத்தி மூன்று🎈

10.அசோகரின் கல்வெட்டுகள் வடமேற்குப் பகுதியில் எம்மொழியில் எழுதப்பட்டு இருந்தது ?

A) கிரேக்கம்
B) கரோஸ்தி🎈
C) பிராகிருதம்
D) பாலி

11. நீர்,வளம், மரம், காடுகள் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ?

A) மாஸாகாஸ்
B) யக்க்ஷன்🎈
C) கோபா
D) ஸ்தானிகா

12.ருத்ரதாமனின் ______ கல்வெட்டு சுதர்சனா ஏரி என்னும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது ?

A) கிர்னார்🎈
B) ஸ்தானிகா
C) ஹெலனிக்
D) லும்பினி

13.தவறானது எது ?

A.ராஜகிரகம் - ராஜ்கிர்
B.கோசலம் - கிழக்கு உ.பி
C.காமரூபா - பனாரஸ்🎈
D.கிரேக்கம் - ஹெலனிக்

14. மகதத்தின் தலைநகரை ராஜகிருகத்தில் இருந்து பாடாலிபுத்திரத்திற்கு மாற்றியவர் ?

A) காலசோகா🎈
B) சிம்ஹசேனா
C) உதயன்
D) தேவனாம்பிரியர்

15. சரியானவற்றை தேர்ந்தெடு.

I) அசோகரின் இரண்டாம் மற்றும் முப்பத்தி மூன்றாம் கல்வெட்டு சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி கூறுகிறது.
II) அசோகர் இளமைக்காலத்தில் அவந்தியின் ஆளுநராக இருந்தார்
III)அசோகர் தன்னுடைய கலிங்க படையெடுப்பை இரண்டாவது தூண் கல்வெட்டில் கூறுகிறார்.
III)அசோகர் தர்மத்தின் பொருள் குறித்து பதிமூன்றாம் தூண் கல்வெட்டில் கூறுகிறார்.

A) I & IV சரி
B) I & III சரி
C) II மட்டும் சரி🎈
D) IV மட்டும் சரி

16. கொழுப்பு செல்களில் காணப்படும் நீரின் அளவு?

A.70%
B.85%
C.25%
D.15%💐

17. மூளையை உடலில் உள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக்கூடிய அமைப்பாக உள்ளது எது?

A. தண்டுவடம்💐
B. தமனி
C. சிரை
D. முகுளம்

18. வலது வென்ட்ரிகிளிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்து செல்வது எது?

A.நுரையீரல் சிரை
B.பெருந்தமனி
C.மேற்பெருஞ்சிரை
D.நுரையீரல் தமனி💐

19. கீழ்க்கண்ட எந்த நிகழ்வின்போது நாம் அதிக அளவு ஆக்சிஜனை உள்வாங்கி அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம்?

A. அதிக இதயத் துடிப்பு
B. கொட்டாவி விடுதல்💐
C. அதிக அழுத்தம்
D. தும்மல்

20. நாம் சுவாசிக்கும் போது காற்று மனித உடலில் கடைசியாக எங்கே செல்கிறது?

A. லாரிங்ஸ்
B. மூச்சுக்குழல்
C. நாசிக்க்குழி
D. ஆல்வியோலஸ்💐

21. சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுப்பது எது?

A. ப்ளூரா
B. எப்பிகிளாட்டிஸ்💐
C. ஆல்வியோலஸ்
D. லாரிங்ஸ்

22. உட்கிரத்தல் இதில் நடைபெறுகிறது?

A. உணவுக்குழல்
B. இரைப்பை
C. பெருங்குடல்
D. சிறுகுடல்💐

23. கீழ்க்கண்ட எந்த தசை விரிவடைவதன் காரணமாக கையைக் கீழே இறக்க உதவுகிறது?

A.இருதலைத் தசை💐
B.முத்தலைத் தசை
C.மென் தசை
D.A &B

24. வாய்த்தளத்தின் அடித்தளத்தில் காணப்படும் எலும்பை தேர்ந்தெடு.

A.ஹயாய்டு எலும்பு💐
B.சுத்தி எலும்பு
C. அங்கவடி எலும்பு
D. பட்டறை எலும்பு

25. நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியதான உள்காதில் உள்ள அங்கவடி எலும்பின் நீளம் ?

A. 2.5 மி.மீ
B. 2.6 மி.மீ
C. 2.8 மி.மீ💐
D. 2.7 மி.மீ

26. கீழே உள்ளவற்றில் எது ஒருசெல் உயிரினம் அல்ல.

A. ஈஸ்ட்
B. அமீபா
C. ஸ்பைரோகைரா💐
D. பாக்டீரியா

27. செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது எது?

A.செல்சுவர்
B.செல் சவ்வு💐
C.நுண் குமிழ்கள்
D.சைட்டோபிளாசம்

28. செல்லின் நகரும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.மைட்டோகாண்ட்ரியா
B.உட்கரு
C.சைட்டோபிளாசம்💐
D.நியூக்ளியஸ் உறை

29. கீழே குறிப்பிட்டுள்ளவற்றுள் விலங்கு செல்லில் காணப்படாதது எது?

A.செல் சவ்வு
B.செல்சுவர்💐
C.நுண் குமிழ்கள்
D.சென்ட்ரியோல்கள்

30. மைக்ரோகிராபியா என்ற நூலுடன் தொடர்புடையவர் யார்?

A.ராபர்ட் ஹுக்💐
B.ராபர்ட் பிரவுன்
C.பெந்தம் மற்றும் ஹுக்கர்
D ஆண்டன்வான் லீவன் ஹாக்

31. செல்லை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.செல்லியல்
B.செல் அறிவியல்
C.செல் உயிரியல்💐
D.செல்லுலாலஜி

32. சிறுகுடலின் நீளம்?

A. 6 மீ💐
B. 8 மீ
C. 12 மீ
D. 4 மீ

33. கீழ்க்கண்ட எந்த வாயுவினை தவிர உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் காற்றின் வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்?

A. நைட்ரஜன்💐
B. ஆக்சிஜன்
C. கார்பன் டை ஆக்சைடு
D. நீராவி

34. சரியான கூற்றை கண்டறி

I.கார்பன் டை ஆக்சைடு - 57°C க்கு குளிர்விக்கும் போது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறுகிறது.
II.இதனை உலர் பனிக்கட்டி என்றழைக்கின்றனர்.
III.இது குளிர்விக்கும் காரணியாக பயன்படுகின்றது

A. I
B.II
C.II III💐
D.இவை அனைத்தும்

35. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவைப்படுகின்றது என்று நிரூபித்தனர்?

A.ஜோசப் பிரிஸ்ட்லி
B.லவாய்சியர்
C.ஜான் இன்ஜென்ஹவுஸ்💐
D.ரூதர்போர்டு

36. காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்பதனை சோதனை மூலம் நிரூபித்தவர்?

A.ஜோசப் பிரிஸ்ட்லி💐
B.லவாய்சியர்
C.வில்லியம் ஜான்சன்
D.ரூதர்போர்டு

37. காற்றின் பெரும்பகுதி கீழ்கண்ட எந்த வாயுவாகும்?

A.ஆக்சிஜன்
B.ஹைட்ரஜன்
C.நைட்ரஜன்💐
D.கார்பன் டை ஆக்சைடு

38. ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு கீழ்கண்ட எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.எரிதல்
B.ஸ்டொமட்டா
C.அடி வளிமண்டலம்
D.உள்ளெரிதல்💐

39. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில்---------

A.உணவிற்கு நிறம் அளிக்கிறது💐
B.உணவிற்கு சுவையை அளிக்கிறது
C.உணவிற்கு புரதத்தையும் தாது உப்புக்களையும் அளிக்கிறது
D.உணவுப்பொருளை புதியதாக இருக்கும்படி செய்கின்றது

40. நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.உறைதல்💐
B.ஆவி சுருங்குதல்
C.ஆவியாதல்
D.உருகுதல்

41. சரியான கூற்றை தேர்ந்தெடு

I. கரைப்பான் என்பது கரை பொருளை கிடைக்கக்கூடிய பொருளாகும்
II.கரை பொருள் என்பது கரைப்பானில் கரையக்கூடிய பொருளாகும்
III. கரைபொருள் கரைப்பானில் கரையும்போது கரைசல் உண்டாகிறது
IV. நீர் ஒரு சர்வ கரைப்பான் ஆதலால் பெரும்பாலான பொருட்களைக் கரைக்கிறது

A. I III
B. I II
C. I II IV
D.I II III 💐

42. வெப்பநிலையின் SI அலகு?

A.ஜூல்
B.கெல்வின்💐
C.வோல்ட்
D.செல்சியஸ்

43. மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய எத்தனை மில்லியன் முன்காற்றுப் பைகள் உள்ளன?

A.100
B.250
C.300💐
D.400

44. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்கு மட்டுமே என்று கூறியவர்?

A.ஜவகர்லால் நேரு
B.அம்பேத்கர்
C.சுபாஷ் சந்திர போஸ்
D.மகாத்மா காந்தி💐

45. 7 தரவுகளின் சராசரி 30 என்க. ஒவ்வோர் எண்ணையும் 3ஆல் வகுக்க கிடைக்கும் புதிய சராசரியை காண்க.
A. 230
B. 70
C. 210
D. 10🌺

46. 30 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 . இங்கு 96 என்று மதிப்பானது 59 என தவறுதலாக வாசிக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில் சரியான மதிப்பெண்களைக் கொண்டு சராசரியை காண்க.

A. 66.56
B. 54.89
C. 79.48🐥
D. 82.90

47. ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க.

A. 63.5
B. 6
C. 64🌺
D. 86

48. 7 மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 . எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?

A. 101
B. 99🌺
C. 100
D. 98

49.5,9,x,17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில் x ன் மதிப்பு காண்க.

A. 9
B. 13🌺
C. 17
D. 21

50. அரைவட்டத்தில் அமையும் கோணம் எது?

A.செங்கோணம்🌺
B.குறுங்கோணம்
C.விரிகோணம்
D.இருசமபக்க முக்கோணம்

51. வட்ட நாற்கரத்தின் ஒவ்வொரு சோடி கோணங்களின் கூடுதல்?

A.90°
B.180°🌺
C.270°
D.360°

52. ஒரு முக்கோணத்திற்கு எத்தனை நடு கோடுகள் வரைய முடியும்?

A.1
B.2
C.3🌺
D.4

53. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம் எது?

A.செங்கோணம்
B.முக்கோணம்
C.விரிகோணம்🌺
D.குறுங்கோணம்

54.(a+b-c)²⁼

A.(a-b+c)²
B.(-a-b+c)²🌺
C.(a+b+c)²
D.(a-b-c)²

55.x⁴ - y⁴ மற்றும் x² - y² இன் மீ.பொ.வ

A. x⁴-y⁴
B. x²-y²🌺
C. (x+y)²
D. (x+y)⁴

56.√27+√12=

A. √39
B. 5√6
C. 5√3🌺
D. 3√5

57 . ³√2, ²√4, ⁴√3 ஏறு வரிசையில் எழுதுக.

A.³√2,²√4,⁴√3
B.⁴√3,²√4,³√2
C.³√2,⁴√3,²√4🌺
D.⁴√3,²√2,²√4

58.நகரத்தின் நிழலாக இருப்பது?

A) தொழில்கள்
B) மரம்
C) மக்கள்தொகை
D) கிராமம்🌺

59. "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்" என்னும் குறட்பாவின் பொருள் ?

A) தன் செல்வத்தின் அளவு அறியாமல் வாழ்பவன் அறிவு பின்நாட்களில் கெட்டு ஒழியும்.
B) தம் அறிவால் செல்வத்தை காட்பவனுடைய செல்வம் அவனது வாழ்க்கைக்கு பயன்படும்.
C) தன் செல்வத்தின் அளவு அறிந்து அதற்கேற்ப வாழாதவன் வாழ்க்கை பல வளங்கள் இருப்பது போல் பொய் தோற்றம் உருவாகி பின்னர் இல்லாமல் அழியும். 🌺
D) தன் வாழ்க்கையின் அளவு தெரியாமல் வாழ்பவன் வாழ்க்கை நன்றாக இருந்து பின்நாளில் கெடும் .

60. பருத்தியாலை என்பது ?

A) காடுசார்ந்த தொழில்
B) மூன்றாம் நிலைத் தொழில்
C) முதல் நிலைத் தொழில்
D) வேளாண்சார் தொழில்🌺

61. கேடறியாக் கெட்ட _____ வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை

A) இடத்தும்🌺
B) வளத்தும்
C) செல்வத்தும்
D) நாட்டினும்

62.ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்க்கான காரணிகள் எது ?

A) காலமும் தொழிலும்
B) காலமும் தேவையும்
C) காலமும் தொழில்நுட்பமும்🌺
D) காலமும் அளிப்பும்

63.மறைந்திருக்கும் ஆற்றல் வளத்திற்கு எ.கா?

A) நீர்
B) நிலக்கரி
C) பெட்ரோல்
D) காற்று🌺

64. I)ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒருவகை திரவப் பொருளே திமிங்கலப் புனுகு ஆகும்.
II) 0.454கி திமிங்கிலப் புனுகின் விலை 63000 டாலர் மதிப்புடையது ஆகும்.
III) இது பன்னாட்டு வளத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

A) I & II சரி
B) I & III சரி
C) II மட்டும் சரி
D) III மட்டும் சரி🌺

65. "கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்" என்னும் பாடல் அடிகளை பாடியவர் ?

A) திருவள்ளுவர்
B) திருநாவுக்கரசர்
C) பாரதியார்🌺
D) பாரதிதாசன்

66. உலக சாதனை படைத்த ஆலமரம் எங்குள்ளது ?

A) அவுரா , கொல்கத்தா🌺
B) அடையார், சென்னை
C) தேனி , மேற்குத் தொடர்ச்சி மலை
D) கொல்லம் , கேரளா

67. உலகின் புலிகள் எண்ணிக்கையில் இந்தியா எத்தனை சதவீதத்தை கொண்டுள்ளது?

A) 48 %
B) 65 %
C) 70%🌺
D) 80%

68. பொருத்துக

கங்கை 1. 2010
ஆற்று ஓங்கில். 2. 2012
லாக்டோ பேசில்லஸ்3. 1963
மயில் 4. 2008

A) 1432
B) 4123🌺
C) 1234
D) 4321

69.தேசியகீதம் எப்பொழுது அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

A) Jan 26, 1946
B) Aug 15, 1950
C) Dec27, 1911
D) Jan 24, 1950🌺

70. "சர்வதேச அகிம்சை நாளாக" அக்டோபர் 2 யை ஐ.நா சபை எப்பொழுது அங்கீகரித்தது ?

A) அக்டோபர் 2012
B) ஆகஸ்ட் 2002
C) அக்டோபர் 2007🌺
D) ஆகஸ்ட் 2007

71.(y-1/y)³=729 எனில் y-1/y மற்றும் y³-1/y³ ஐக் காண்க.

A)656
B)756🌺
C)864
D)729

72. I) அரசியலமைப்பு நிர்ணய சபையில் 398 உறுப்பினர்கள் இருந்தனர்.
II) அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
III) அரசியலமைப்பு வரைவு குழுவின் ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார்.
IV) அரசியலமைப்பு சட்டம் 16.9.2016 வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது .

A) I,II& IV சரி
B) III & IV சரி🔥
C) I,III & IV சரி
D) அனைத்தும் சரி

73. கொடுமணல் என்னும் ஊர் எந்நூலில் கூறப்பட்டுள்ளது ?

A) புறநானூறு
B) பரிபாடல்
C) பட்டினப்பாலை
D) பதிற்றுப்பத்து🔥

74. பாண்டவன் திட்டு எங்கு உள்ளது ?

A) கொடுமணல்
B) தஞ்சை
C) தர்மபுரி🐥
D) ஈரோடு

75. புலிமான் கோப்பை நடுகல் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?

A) கி.பி ஆறாம் நூற்றாண்டு
B) கி.மு ஆறாம் நூற்றாண்டு
C) கி.மு மூன்றாம் நூற்றாண்டு🐥
D) கி.பி ஐந்தாம் நூற்றாண்டு

76."A History of Ancient and Early Mediaeval India Pearson " என்னும் நூலை இயற்றியவர் ?

A) ஆர்.எஸ். சர்மா
B) உபின்தர் சிங்🐥
C) ரொமிலா தாப்பர்
D) அருந்ததி ராய்

77.புத்தருடைய உடல் உறுப்புகளின் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) புத்த விகாரம்
B) விகாரைகள்
C) சைத்தியம்
D) ஸ்தூபி🐥

78.புத்தர் முந்தைய பிறவிகளில் மனிதராகவும், விலங்காகவும் இருந்ததைக் குறித்த கதைகள் எது ?

A) கற்பனை கதைகள்
B) ஜென் கதைகள்
C) ஜாதக கதைகள்🐥
D) சித்தார்த்தர் லீலைகள்

79. ஈரமான சுவரின் மீது வண்ணங்களை கொண்டு வரையப்படும் ஓவியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) Frescoes🐥
B) Nirvana
C) Preceptor
D) Corpse

80. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 5 அதன் இலக்கங்கள் இடமாற்றப்பட்டால் கிடைக்கும் புதிய எண்ணானது கொடுக்கப்பட்ட எண்ணை விட 27 குறைவு எனில் அந்த எண்ணை காண்க.

A.41🐥
B.50
C.32
D.23

81. சிக்கந்தரின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். 5 ஆண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இருமடங்காகும் எனில் ,சிக்கந்தரின் தற்போதைய வயதை காண்க.

A.60
B.40
C.45🐥
D.55

82. தமிழ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் மாதம் 5000 சேமிக்கிறார்கள் எனில், ஐஸ்வர்யாவின் மாத வருமானத்தை காண்க.

A.30,000
B.35,000
C.40,000🐥
D.45,000

83. இரு வெவ்வேறு அளவு விட்டமுடைய குழாய்கள் மூலம் ஒரு நீச்சல் குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப 24 மணி நேரம் ஆகும். அதிக விட்டமுடைய குழாயை 8 மணி நேரமும் குறைந்த விட்டமுடைய குழாயை 18 மணி நேரமும் பயன்படுத்தி நீர் நிரப்பினால் நீச்சல் குளத்தில் பாதி அளவு நீர் நிரம்பும் எனில் தனித்தனியாக அந்த குழாய்களைக் கொண்டு நீச்சல் குளம் முழுவதும் நீர் நிரப்ப ஆகும் கால அளவுகளை காண்க.

A.40 மணி நேரம்
B.30 மணி நேரம்
C.20 மணி நேரம்
D. 50 மணி நேரம்🐥

84.2x-3y=7; (k+2)x-(2k+1)y=3(2k-1) என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்கு எண்ணற்ற தீர்வுகள் உண்டு எனில் K யின் மதிப்பை காண்க.

A.4🐥
B.7
C.5
D.2

85. வினிதாவின் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இருமடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவளது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்கு சமம் எனில் வினிதாவின்வயது என்ன?

A. 40🐥
B. 39
C. 38
D. 42

86. இரு எண்கள் 5:6 என்ற விகிதத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்து முறையே 8 ஐக் கழித்தால் அவற்றின் விகிதம் 4: 5 என மாறும் எனில் அந்த எண்ணின் விகிதம் காண்க.

A. 6:5
B. 5:6🐥
C. 4:5
D. 2:5

87. 4 பெரியவர்கள் மற்றும் 4 சிறுவர்கள் சேர்ந்து 3 நாட்களில் ஒரு வேலையை முடிக்கிறார்கள். 2 பெரியவர்கள் மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையை 4 நாட்களில் முடிக்கிறார்கள். எனில் இப்பணியை தனியாக ஒரு சிறியவர் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?

A. 36🐥
B. 18
C. 24
D. 30

88. ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் அந்த மனையின் பரப்பளவை காண்க.

A. 12000 மீ²🎈
B. 1558.8 மீ²
C. 14000 மீ²
D. 4242 மீ²

89. ஒரு கன செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 என்க. அதன் கன அளவு 35840 செமீ³ எனில் அதன் அகலத்தை காண்க.

A.40🎈
B.16
C. 8
D. 56

90. உலோகத்தாலான ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 12 செமீ. அதனை உருக்கி 18 செமீ நீளம் மற்றும் 16 செமீ அகலமுள்ள ஒரு கன செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனசெவ்வகத்தின் உயரத்தை காண்க

A. 6🎈
B. 9
C. 12
D. 20

91. பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சி நிகழ்தகவு இருக்க முடியாது?

A. 0
B. 0.5
C. 1
D. -1🎈

92. நாளைய மழைப்பொழிவை காண நிகழ்தகவு 91/ 500 எனில் மழை பொழியாமல் இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?

A. 0.42
B. 0.09
C. 0.616
D. 0.818🎈

93. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஒற்றை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

A. 3/6
B. 1/2🎈
C. 4
D. 2

94. ஒரு பகடை உருட்டும் போது மூன்றை விட பெரிய என் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

A. 0.333
B. 0.5🎈
C. 0.25
D. 5

95. அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையை பின்பற்றியவர்கள் ?

A) புதியகற்கால மனிதர்கள்
B) சிந்துவெளி மக்கள்
C) ஆரியர்கள்🎈
D) ஹரப்பா மக்கள்

96. ரிக்வேத ஆரியர்களின் வாழ்விடம் எது?

A) மத்திய ஆசியா
B) மேற்கு பாகிஸ்தான்
C) ஹரியானா
D) பஞ்சாப்🎈

97.இனக்குழுவின் பொதுக்குழு என அழைக்கப்படுவது ?

A) விதாதா🎈
B) சமிதி
C)கிராமணி
D) சபா

98. கீழ்க்கண்டவற்றில் தவறானது;

A)பாலி என்பது அரசர்க்கு மக்கள் தானாகவே முன் வந்து கொடுத்த காணிக்கையாகும்.
B) முன் வேதகாலத்தில் இது ஒரு வரியாக இருந்தது. 🎈
C) குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் இது.
D)பாலி என்பது ஒருவர் தனது விவசாய மகசூலில் (அ) கால்நடையில் 1/6 பங்கை இவ்வரிக்கு செலுத்த வேண்டும்.

99. வேதகாலத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) சத்மனா
B) ஹிரண்யா
C) பிரஜாபதி
D) கிரகஸ்தம்🎈

100. தீபகற்ப இந்தியாவில் இருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை குறிப்பிடுபவர் ?

A) பெர்கூசன்
B) பெரிப்பிளஸ்🎈
C) அலெக்சாண்டர் ப்ரௌன்
D) பிளினி

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News