Wednesday, May 20, 2020

ஆகஸ்ட் 01 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : ஆந்திர முதல்வர் அறிவிப்பு


ஐதராபாத்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் மே 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் அலுவலகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
மேலும், ஆந்திராவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடரும் என்றும் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News