ஜூலை 1 -ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ள எஞ்சியிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மற்றும் வடகிழக்கு டெல்லி பகுதியில் ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சில தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் சிபிஎஸ்சிஇ தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சிஇ தேர்வுகள் மாற்று மையங்களில் நடத்தப்படாமல் மாணவர்கள் பயில்கின்ற அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment