Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 5, 2020

10ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு அட்டவணை மே மாத இறுதியில் வெளியாகிறது: பொதுத் தேர்வு மாணவர்கள் தயாராக இருக்க ஆசிரியர்கள் கோரிக்கை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஒத்தி வைக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. தேர்வுகள் ஜூன் 3வது வாரத்தில் நடத்தவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவை அடுத்து உடனடியாக பிளஸ் 1 வகுப்புக்கான 3 பாடங்களுக்கான தேர்வுகள், பத்தாம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் தேர்வுகள் நடப்பது கேள்விக்குறியானது.
இதுபோல தேர்வுகளை நடத்தாமல் இருக்க முடியாது என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்தலாம் என்று அரசுத் தேர்வுத்துறை எண்ணியுள்ளது. இந்த தேர்வுக்கான அட்டவணை மே மாத இறுதியில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. மார்ச் மாதம் 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வு (3 தேர்வுகள்), மார்ச் 23ம் தேதி நடத்த பிளஸ் 2 தேர்வில் எழுத முடியாமல் போனவர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஓய்வு காலத்தில் மாணவர்கள் தேர்வுக்கான பாடங்களை படிக்க ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News