ஆரோக்கிய சேது ஆப் இல்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் இல்லை என்றால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய சேது ஆப் இல்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் இல்லை என்றால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை
கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாநில மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரதான பகுதியாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்
இதையடுத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஆரோக்கிய சேது என்ற ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.
ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது
அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலி அரசு அறமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்கள் இருப்பிடம்( ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை காட்டும்.
அதிக ஆபத்து என எச்சரிக்கும்
இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து 6 தூரத்தில் நாம் இருந்தோம் என்றால் அது அதிக ஆபத்து என எச்சரிக்கும், இதையடுத்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்து உதவியை பெற வேண்டும்.
கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா
அதேபோல் இந்த செயலியில் கொரோனா ஆப் தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு, மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். பிரதமர் கூறும்போது, உங்கள் பகுதியில் யாராவது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் செயலி அடையாளம் காட்டும். பல்வேறு மாநிலங்களின் உதவி எண்களும் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு பெரிதும் உதவும்
ஆரோக்ய பயன்பாட்டை மக்கள் பதிவிறக்கம் செய்தால், இது அரசாங்கத்திற்கு பெரிதும் உதவும், ஏனெனில் இந்த சூழ்நிலைகளில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்களது நிலை குறித்தும் தெரிவிக்க முடியும்.
IMPORTANT LINKS
Thursday, May 7, 2020
இந்த ஆப் மொபைல்ல இல்லனா ரூ.1000 அபராதம்., 6 மாதம் சிறைத் தண்டனை
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment