Tuesday, May 19, 2020

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் ! - புதிய தேர்வு அட்டவணை இதோ!


தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக நடைபெறாமல் இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஜூன் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கல்வி நிலையங்கள் கடந்த மார்ட் 17-ம் தேதி மூடப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவில்லை. மீண்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால் மீண்டும் தேர்வு நடக்குமா என்ற குழப்பம் நீடித்த நிலையில், இரண்டாவது முறையாக தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. .
பொதுத்தேர்வு அட்டவணை
ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்
ஜூன் 17-ம் தேதி ஆங்கிலம்
ஜூன் 19-ம் தேதி கணக்கு
ஜூன் 20-ம் தேதி விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 22-ம் தேதி அறிவியல்
ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்
ஜூன் 25-ம் தேதி தொழிற்பாடம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News