Sunday, May 17, 2020

10-ஆம் வகுப்பு மாணவர் எவருக்கேனும் கொரோனா தொற்று இருக்கிறதா? : கணக்கெடுக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை..!


10-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை தயார் செய்யும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியிருக்கிறது.
இந்த கணக்கெடுப்பின் போது மாணவர்களின் குடும்பத்தினர் யாரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனரா என்றும் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த தரவுகளின் அடிப்படையில் கொரோனா பாதிப்புள்ள மாணவர்களுக்கு எப்போது, எப்படி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News