Join THAMIZHKADAL WhatsApp Groups

கரோனா வைரஸ் பரவல் காரண மாக தமிழகத்தில் ஒத்திவைக்கப் பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நோய்த்தொற் றின் தீவிரம் குறையாததால் பொதுத் தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப் பட்டன. அதேநேரம், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இதற்கிடையே பெரும்பாலான பள்ளிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள், காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை மாவட்ட நிர்வாகம் இட மாற்றம் செய்த பின்னரே, பள்ளி களை தூய்மைப்படுத்தி தேர்வு மையங்களாக மாற்ற முடியும். அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைப்பதால் விடைத் தாள், வினாத்தாள் இடமாற்றம் உள் ளிட்ட முக்கிய பணிகளை செய்து முடிக்க குறைந்த காலஅவகாசமே உள்ளது. இவற்றை முறையாக மேற்கொள்ளாதபட்சத்தில் நோய் பரவலுக்கு வழிவகுத்துவிடும்.
மேலும், வெளிமாவட்டங்களில் இருந்துவரும் மாணவர்களில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர் களை மட்டும் தனிமைப்படுத்தி சோதனை செய்ய உத்தரவிட்டுள் ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப் படும் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாமா, தேர்வின் இடையே ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என் பன போன்ற கேள்விகளுக்கு தெளி வான வழிகாட்டுதல் இல்லை.
இதேபோல், பொதுபோக்கு வரத்து இல்லாததால் வெளிமாவட் டங்களில் இருந்து வரும் மாணவர் கள் சொந்த செலவில் பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இவை ஏழை மாணவர்களுக்கு கூடு தல் சுமையாகியுள்ளதாக ஆசிரியர் கள், கல்வியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தற்போதைய அசாதாரண சூழலில் பொதுத்தேர்வை நடத்து வது சவாலான காரியம்தான். எனி னும், மாணவர்கள் நலன்கருதி தேர்வை நடத்த வேண்டிய அவசி யம் உள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு மையத்துக்கு எளிதாக வரமுடியும்.
மேலும், வெளிமாவட்டங்களில் குறைந்த அளவிலான மாணவர் களே தங்கி உள்ளனர். அவர்களை மே 25-க்குள் இருப்பிடத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் பொதுத்தேர்வை ஆகஸ்ட் மாதத்தில்தான் நடத்த முடியும். அதனால் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே, மாணவர்கள் பயமின்றி தேர்வுக்கு தயாராகலாம். மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.
இதற்கிடையே பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் சென்னை தலைமை செயலகத் தில் இன்று (மே 18) நடைபெற உள்ளது. இதன்முடிவில் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment