Monday, May 11, 2020

சென்னையில் வருகிற மே 18-ம் தேதி முதல் 25 பயணிகளுடன் பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்


சென்னை: சென்னையில் வருகிற 18-ம் தேதி முதல் பஸ்களை இயக்கும் போது இருக்கைகளில் 20 பயணிகளை அமரச் செய்தும், 5 பயணிகளை நிற்பதற்கு அனுமதித்தும் ஆக மொத்தம் 25 பயணிகளுடன் பஸ்களை இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் குறைய குறைய பஸ்களில் பயணிகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்துள்ளனர். இதேபோல் மின்சார ரெயில்களில் ஒரு பெட்டிக்கு 50 பேர்களை அனுமதிக்கும் வகையில் ரெயில்களை இயக்குவது என்றும், மெட்ரோ ரெயிலில் மொத்தம் 160 பயணிகளுடன் இயக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பஸ், ரெயில் போக்குவரத்து தவிர்க்க முடியாத ஒன்றாகும். மக்களின் சகஜ வாழ்க்கை மீண்டும் திரும்பும் வகையில் பஸ், ரெயில் போக்குவரத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொதுமக்களுக்கு அந்த அறிவிப்புகள் முறையாக தெரிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 18-க்கு பிறகு 50% பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை செயலாளர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

1 comment:

  1. தனி மனித இடைவெளி
    கட்டாயம் கடைபிடி
    கடைவெளிகளில்..

    தடைகளெலாம் ஆகட்டும்
    தவிடு பொடி..

    தளரட்டும்..வளரட்டும்
    தளராத மனம் துள்ளட்டும்

    போ..போ. கொரோனா
    பொல்லாத கொரோனா
    எல்லாநாடுகளிலும்
    எல்லையிலா வண்ணம்
    தொல்லை தர‌‌ நுழைந்தார்
    கொல்லைப்புற வழியாய்

    முடிவுகட்டுவோம்.. உனக்கு
    தலை காட்டாமல் ஓடிவிடு

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News