Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 5, 2020

கணினி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியில் 2 வார பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக , அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் 2 வார Faculty Development Workshop on ' Problem solving using Python ' திட்டமிடப்பட்டுள்ளது .
இப்பயிற்சியினை Amphisoft Technologies நிறுவனம் மூலம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் , பைத்தான் புரோகிராம் ( Python Program ) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது என்றாலும் , உயர் படிப்பில் சமாளிப்பது கடினம் என்பதால் , இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்கள் சுமார் 300 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Bootcamp ( துவக்க முகாம் ) நடத்தப்பட உள்ளது. பைதான் புரோகிராம் ( Python Program ) ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் , இந்த Bootcamp ( துவக்க முகாம் ) மூலம் ஆசிரியர்கள் , திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். மேலும் Web Developing , Data Analysis , Artificial Intelligence மற்றும் Machine Learning and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் ஏதுவாக Bootcamp ( துவக்கமுகாம் ) எதிர்காலத்தை வடிவமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான Bootcamp ( துவக்க முகாம் ) 12 நாட்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் நடைபெறும்.
அதனை தொடர்ந்து E - Box Online Practice Session நடைபெறும். பயிற்சி அமர்வின் போது ஆசிரியர்கள் சுமார் 10 realtime பயிற்சிகளை செய்து முடிப்பர்.
நடைமுறையில் அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்த அவர்களுக்கு நேரடி வழிகாட்டல் வழங்கப்படும். 12 நாட்கள் Bootcamp முகாம் முடிவதற்குள் , ஒரு ஆசிரியர் 120 realtime பயிற்சிகளைத் தோராயமாக முடித்திருப்பார். பங்கு பெற்ற அனைத்து கனிணி ஆசிரியர்களுக்கும் பயற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது + 2 மதிப்பீட்டுப் பணியைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி நேரம் குறித்து Amphisoft Technologies நிறுவனம் தெரிவிக்கும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கும் இந்த COVID - 19 Lockdown காலகட்டத்தில் அவர்களை தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுவதற்காக இந்த Bootcamp ( துவக்க முகாம் ) மிக முக்கியமானதாக இருக்கும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges . com / tncsereg இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Bootcamp ( துவக்க முகாமில் ) பதிவு செய்து பங்குபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் Dr . Balamurgan , Learning Officer , Amphisoft Technologies E - Mail ID Chief balamurugan@amphisoft.co.in மற்றும் mobile number 9442019192 - க்கு தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.




No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News