Friday, May 15, 2020

பள்ளி பாடத்திட்டத்தில் பிரம்மாண்ட சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் பணி துவங்கியது 2023 இல் புதிய பாடப்புத்தகங்கள் தயாராகும்.. நாடு முழுவதும் கல்வித்துறையில் அதிரடி..



பள்ளி பாடத்திட்டத்தில் பிரம்மாண்ட சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் பணி துவங்கியது 2023 இல் புதிய பாடப்புத்தகங்கள் தயாராகும்..
நாடு முழுவதும் கல்வித்துறையில் அதிரடி..
நாட்டில் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்வதற்கான பிரம்மாண்ட நடவடிக்கையை 14 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காக தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் மறுஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக NCERT தனது பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது நாடு முழுவதும் கல்வி கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர புதிய தேசிய கல்வி கவுன்சிலை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது இதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இது இம்மாத இறுதியில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த வரைவு அறிக்கையில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது மேலும் பள்ளி கல்வி தொடங்கி உயர்கல்வி வரையிலான அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தங்களை செய்யக்கூடியத ு தற்போதைய தேர்வு முறையில் சிறு திருத்தங்கள் செய்யவும் ஆசிரியர் பயிற்சி பள்ளி கல்வியில் அமைப்பில் மாற்றங்கள் செய்யவும் வரைவு கல்விக் கொள்கை இந்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டுவர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய பாடத்திட்டம் தயாராகிவிடும் என்றும் அதன் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் புதிய பாட புத்தகங்கள் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு தயாராகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது..
மாணவர்கள் சுமையை குறைக்கும்
புதிய பாடத்திட்டம் மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும்...
ஒவ்வொரு பாடத்திலும் வேலைவாய்ப்பு சார்ந்த அம்சங்கள் இடம்பெறும்..
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் கடைசியாக 14 ஆண்டுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டது
இதற்கு முன் கடந்த ஆயிரத்து 1975 ,1988 2000, 2005 ஆகிய ஆண்டுகளில் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது
மழலைக் கல்வி முதல் உயர்கல்வி வரை
புதிய சீர்திருத்தத்தின் படி புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் இதற்கான திட்டங்களை வகு க்கும் பணிகளை என்சிஇஆர்டி வரும் நவம்பரில் தொடங்க உள்ளது இதற்கான நிபுணர்கள் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் இதன்பின் 22 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை யிலான பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News