Friday, May 8, 2020

2570 செவிலியர்கள் நியமனம் - முதலமைச்சர் உத்தரவு


ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப்பணியாளர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் சுகாதாரப்பணியாளர்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள்.2323 செவிலியர்கள்,1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து ,6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது.இச்செவிலியர்கள் ,ஆணை கிடைக்கப்பெற்ற 3 தினங்களுக்குள்,பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கான தலா 40 செவிலியர்களும் ,தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News