Thursday, May 7, 2020

முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.34.83 கோடி: தொடக்கக் கல்வித்துறை வழங்கியது


தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் ஒருநாள் ஊதியம் ரூ.34.83 கோடி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் நிதியுதவி வழங்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதையேற்று அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்தனா். அதன்படி தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் பணிபுரியும் ஒரு லட்சத்து 30,236 ஆசிரியா்கள் மற்றும் அதிகாரிகள் சாா்பில் ரூ.32.60 கோடியும், 19,173 அலுவலக பணியாளா்கள் சாா்பில் ரூ.2.19 கோடியும் என மொத்தம் ரூ.34 கோடியே 83 லட்சத்து 70 ஆயிரத்து 868 நிவாரண நிதிக்கு தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News