Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 19, 2020

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது. முதுகலை கணினி ஆசிரியர் அறிவிப்பாணைக்குப் பின் 12.06.2019 அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் (PGTRB) 2144 பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு கடந்த 12.02.2020 ஆம் தேதியன்று பணியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் வழக்குகள் காரணமாக தெரிவு செய்யப்பட்ட 697 முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை. மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 117 ஆசிரியருக்கான தீர்வும் கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஒரு சிலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பின் பெயரில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஏனைய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். அரசு மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்திலாவது 2019 - ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்றுள்ள 824 ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top