தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வின்போது, எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், ஏற்பாடுகள் தொடர்பாகவும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் துவங்கிய ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தேர்வு
10ம் வகுப்பு
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்கள் எவ்வாறு அமைப்பது, மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பது எப்படி என்பது பற்றியும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் தேர்வு அறைகளை அமைப்பது எப்படி, அந்த பகுதி மாணவர்களை பிற பகுதி தேர்வு அறைக்கு எப்படி அழைத்து வருவது என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
புத்தகம்
புத்தகம், சீருடை
மேலும், கொரோனா காரணமாக, மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. அது எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. வகுப்புகள் திறக்கப்படும் தேதி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது பற்றிய ஏற்பாடுகளை எப்படி செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
மாற்று யோசனை
சுழற்சி முறை
மாணவர் இருக்கைகளை சமூக இடைவெளி விட்டு மாற்றியமைத்தல், காலை மற்றும் மாலை என சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றியெல்லாம் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதம் எப்படியும் பள்ளிகளை திறப்பது என்ற முடிவில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா
பிற நாடுகள்
கொரொனா வைரஸ் பாதிப்பு முழுவதுமாக ஒழியும் வரை பள்ளிகளைத் திறக்க கூடாது என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அதுபோன்ற பள்ளி திறப்பு நடவடிக்கைகளை எப்போது தொடங்கலாம் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment