Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 21, 2020

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.!!!அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு .!!!


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த தேர்வு 15-ந் தேதி நடைபெறும். அதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். மே 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத முழு பாதுகாப்பு வழங்கப்படும்.இது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விவரமாக இன்று மாலை அறிக்கை வெளியிடப்படும்.
ஊரடங்கு 15 ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். மேலும் வருகிற 25 ஆம் தேதி விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. 1 ஆம் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது.10-ம் வகுப்பு தேர்வு மையம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முன்பு 3,084 தேர்வு மையம் இருந்தது. தற்போது 12,672 மையங்கள் செயல்படும், மாணவர்கள் அந்தந்த பள்ளியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். மலை பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News