Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 31, 2020

வெயிட் குறையணும்னு நெனச்சா பனீர்-டோஃபு ரெண்டுல எது நிறைய சாப்பிடலாம்?

உடல் எடை இழப்பு என்றாலே நிறைய பேர் டயட் இருக்க ஆரம்பித்து விடுவோம். சிலர் உடல் எடையை குறைக்க பனீர், டோஃபு போன்ற பொருட்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்ற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். இதில் எது சிறந்தது எது உடலுக்கு ஏற்றது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் அறிந்து கொள்வோம்.

எடை இழப்பு என்று வந்தாலே முதலில் நம் கவனத்திற்கு வருவது உணவு சம்பந்தமான விஷயம் தான். எடை இழப்பிற்கு சாதகமான உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சிப்போம். குறிப்பாக பால் பொருட்கள் எடை இழப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தயிர், பனீர், டோஃபு போன்ற பொருட்களை எடை இழப்பிற்காக மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பனீர் சிறந்ததா அல்லது டோஃபு சிறந்ததா என்பதை கீழே காண்போம். இவ்விரண்டின் ஊட்டச்சத்துக்கள் முதல் கலோரிகள் வரை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இங்கே காணலாம்.
​பனீர்

பாலாடை கட்டி என்று அழைக்கப்படும் பனீர் பால் புரதத்தால் ஆனது. சில நேரங்களில் இதை மென்மையாக்க க்ரீம் போன்ற பொருட்களை சேர்ப்பதுண்டு. இது உங்களுக்கு தேவையில்லாத கொழுப்புகளை அளிக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் சாதாரண உணவை கலோரி உணவுகளை சாப்பிட விரும்பினால் அந்த விஷயத்தில் நீங்கள் டோஃபை விட பனீரை தேர்ந்தெடுக்கலாம்
​டோஃபு

டோஃபு என்பது சோயாவின் பாலை குறைந்த கொழுப்பு தொகுதியாக மாற்றுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக சைவ உணவுப் பொருட்கள் அடங்கிய சூப்பர் மார்க்கெட்டில் டோஃபு எளிதில் கிடைக்கும். நீங்கள் எடை இழப்பு திட்டத்தில் இருந்தால், உங்க கலோரி அளவை குறைக்க விரும்பினால் டோஃபு உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும். குறைந்த அளவிலான டோஃபில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் குறிப்பிட்ட அளவு காணப்படுகின்றன. எனவே பால் அழற்சி, லாக்டோஸ் அழற்சி இருப்பவர்கள் பனீரை தேர்ந்தெடுக்காமல் டோஃபை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் டோஃபு உங்க கால்சியம் அளவை பூர்த்தி செய்ய உதவும். பனீருக்கு பதிலாக டோஃபை மாற்றுவதன் மூலம் சில வாரங்களிலேயே வித்தியாசத்தை நீங்கள் உணர முடியும்.

​எது ஆரோக்கியமான ஒன்று

அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், விட்டமின் பி1, கொழுப்பு கள் போன்றவை டோஃபில் குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான சாய்ஸ் ஆக இருக்கும். இருதய பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது எடை குறைப்பு திட்டத்தில் இருப்பவர்களுக்கு டோஃபு சிறந்த ஒன்றாக இருக்கும்.

​கொலஸ்ட்ரால்

டோஃபில் பூஜ்ய கொழுப்பு மட்டுமே உள்ளது. அதே முழு க்ரீம் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில் 100 கிராம் முதல் 90 மி. கி வரை கொழுப்பு காணப்படுகிறது.

ஊட்டச்சத்து அளவுகள்

டோஃபில் வைட்டமின் பி1 மற்றும் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில் பன்னீரில் இந்த சத்துக்கள் இரண்டுமே இல்லை.

​சோயா மற்றும் பால்

சோயா ஒவ்வாமை இருப்பவர்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை தேர்வு செய்யலாம். பால் ஒவ்வாமை இருப்பவர்கள் டோஃபை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் சைவ பிரியர்கள் என்றால் இந்த இரண்டுமே உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.

அதிக புரதச்சத்து

100 கிராம் பன்னீரில் 18.3 கிராம் புரோட்டீனும் டோஃபில் 6.9 கிராம் புரோட்டீனும் காணப்படுகிறது. ஆனால் பன்னீரில் அதிகளவு கொழுப்பு இருப்பதால் எடை இழப்பு திட்டம் என்று வரும் போது டோஃபு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

​இரும்புச் சத்து

பனீரில் குறைந்த அளவு இரும்புச் சத்து காணப்படுகிறது. ஆனால் டோஃபில் இரும்புச் சத்து, ஹூமோகுளோபின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன . எனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டோஃபு சிறந்த ஒன்றாக இருக்கும்.

கவனிக்க வேண்டியவை

டோஃபை பன்னீருக்கு நடுவே தேர்வு செய்வது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. எனவே உங்களுக்கு எந்த சத்து தேவை எந்த அவசியத்திற்கு தேவை என்பதை உணர்ந்து தேர்வு செய்யுங்கள். குறிப்பாக எடை இழக்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு டோஃபு சிறந்த ஒன்றாக அமையும். அதே மாதிரி உங்க உடல்நிலைக்கு எது ஏற்றது என்பதை அறிய ஒரு முறை ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News