Friday, May 8, 2020

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு


ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் பொது ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சமீபத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் உள்ள பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News