தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சாலைகளை தூய்மைப்படுத்தும் வாகனப் பயன்பாட்டை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு மையங்கள் 3 ஆயிரத்து 684-ல் இருந்து 12 ஆயிரத்து 674 ஆக உயர்ந்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
No comments:
Post a Comment