Thursday, May 7, 2020

பெண்குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைத்த பெற்றோர்.! இப்போ வேண்டும் வேண்டும் என கூறும் அளவிற்கு அந்த பெண் செய்த சாதனை.!


திருவள்ளூரில் தொடர்ச்சியாக மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தபோது, ​​பிறந்த குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைத்த பெற்றோர் தற்போது வேண்டும் வேண்டும் என சொல்லும் அளவிற்க்கு அந்த குழந்தை சாதித்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களுக்கு தொடர்ச்சியாக மூன்று பெண் பிள்ளைகள் பிறந்ததை அடுத்து, மூன்றாவது குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைத்துள்ளனர். இருப்பினும் தங்கள் மூன்று பிள்ளைகள் மீதும் அளவுகடந்த பாசம் வைத்த அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்துள்ளனர்.
வேண்டாம் என பெயரிடப்பட்ட அந்த மூன்றாவது குழந்தை தற்போது வளர்ந்து சென்னை புறநகரில் அமைந்துள்ள சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் B.Tech ECE படிப்பினை படித்துமுடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், கூடவே ஜப்பானிய மொழியிலும் ஆர்வம் கொண்ட அவர் சரளமாக பேச, எழுத கூடிய அளவிற்கு ஜப்பானிய மொழியையும் கற்று தேர்ந்துள்ளார்.
இதனிடையே வேண்டாம் படித்துவரும் கல்லூரியில் நேர்காணலுக்கு சென்ற ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம் ஓன்று 11 பேரை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த தேர்வு செய்துள்ளது. அந்த 11 பேரில் வேண்டாமும் ஒருவர். மேலும், அந்த பணிக்காக வருடத்திற்கு 22 லட்சம் அந்த பெண்ணிற்கு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை கேட்ட அவரது பெற்றோர் உட்பட பலரும் சந்தோசத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அம்மாவட்ட ஆட்சியர் மாகேஸ்வரி ரவிக்குமார் வேண்டாமுக்கு தனது வாழ்த்துக்களை கூறியதோடு திருவள்ளூர் மாவட்ட பெண் குழந்தைகளின் நலனுக்கான தூதராக வேண்டாமை பரிந்துரை செய்துள்ளார்.
பெண் குழந்தை வேண்டாம் என பெயர் வைத்த பெற்றோர் தற்போது வேண்டாம் என பெயர் வைத்த தங்கள் மகளால் பெருமையின் உச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News