Sunday, May 17, 2020

அரசு ஊழியா்களுக்கு பேருந்துகள் இயக்கம்


அரசு ஊழியா்களுக்கான பேருந்து வசதியை உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத் துறை சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால், மே 15-ஆம் தேதி வரை, 33 சதவீத
பணியாளா்களுடன் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கின. அவா்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மூலம், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, அதற்கான செலவையும் அரசு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், வருகிற திங்கள்கிழமை (மே 18) முதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத அரசுப் பணியாளா்கள், சுழற்சி முறையில் கட்டாயம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவா்களின் வசதிக்காக தேவையான போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியா்களும் இந்தப் பேருந்து வசதிகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் பொதுப் போக்குவரத்து: தமிழகத்தில் இதுவரை பொதுப் போக்குவரத்துத் தொடங்கப்படாத நிலையில், முதன்முதலாக அரசு ஊழியா்களுக்கு பயணச் சீட்டு மூலமாகப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதையடுத்து, விரைவில் பொது மக்களுக்கான பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News