சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுகளை அந்தந்த பள்ளியிலேயே எழுதலாம் என்றும், வெளியிடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பு நடந்த பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த உடனேயே விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜூலை இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், அவரவர் படித்த பள்ளியிலேயே பொதுத் தேர்வை எழுதலாம் என்றும் வேறு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்வெழுத வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அவரவர் சொந்த குடிநீர் கேன்களைக் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment