Thursday, May 14, 2020

மயிலம் ஒன்றியம் இரட்டணை, கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரம்


விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரித்து மாணவர்களுக்காக உருவாக்கிய வாட்ஸ்அப் பதிவேற்றம் செய்து பாடம் நடத்தி வருகின்றனர்.
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் ஒவ்வொரு பள்ளிகளும் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்கள் அனைவரையும், அவர்களது வாட்ஸ்அப் எண்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கிட தொடக்கக்கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், இப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அவரவர் தங்களது பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவிகளின் செல்போன்களை தொடர்பு கொண்டு, அவர்களது வாட்ஸ்அப் எண்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளனர்.

வாட்ஸ்அப் எண் இல்லாத பெற்றோர்களிடம்,அவர்களது நெருங்கிய உறவினர்களின் எண்களை மாற்றாகக்கொண்டும், அந்தந்த அரசு பள்ளிகளின் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை தொடங்கி வருகின்றனர்.
கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும்ஆசிரியர்கள் இப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.வாட்ஸ்அப் குழுக்களின் நோக்கம்,பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து அறிவிப்புகளும்,அனைத்து மாணவ,மாணவியர்களுக்கும் உடனடியாக சேரவேண்டும் என்பதாகும்.
வாட்ஸ்அப் குழுக்களில் அந்தந்த பள்ளிகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளனர்.
இனி வரும் கல்வியாண்டுகளில் அந்தந்த பள்ளிகளின் செயல்பாடுகள் அனைத்தும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News