Saturday, May 16, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு


சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2 ஆம் தேதி நடத்தப்படும். மேலும், தேர்வு எழுத முடியாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும். ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சில மாணவர்கள் வெளி மாவட்டத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதற்காக https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்கில் சென்று இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூரில் உள்ள தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வந்த மாணவர்களை 3 நாள்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News