அரசு பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சியை, அமைச்சர் செங்கோட்டையன், 'வீடி யோ கான்பரன்ஸ்' முறையில் துவக்கி வைத்தார்.
தொழில்நுட்ப துறையில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனை, மாணவர்களிடம் மேம்படுத்தும் நோக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக, கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், அரசு பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு, 'பைத்தான் சாப்ட்வேர்' பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணையும் ஆசிரியர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு, ஆன்லைனில் கற்றல் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார்.
பயிற்சியில், மாநிலம் முழுதும் இருந்து, 2,000 ஆசிரியர்கள் பங்கேற்கபதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தினமும், காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment