Friday, May 8, 2020

நலிந்தோரை தேடி சென்று உதவி செய்யும் ஆசிரியை


நாகப்பட்டினம் : கொரோனா தாக்கம் துவங்கிய நாளில் இருந்து, ஆயிரக்கணக்கானோருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை, நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு, சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை வசந்தா, 50. தமிழகத்தில் கொரோனா தாக்கம் துவங்கியவுடன், முதல்வர் நிவாரண நிதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.தொடர்ந்து, கருப்பம்புலம், நெய்விளக்கு, கோடியக்கரை உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், போலீசார், துாய்மை பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என, 4,000 பேருக்கு, 'மாஸ்க், மஞ்சள் துாள், சோப்பு, அகல், தேங்காய் எண்ணெய், திரி அடங்கிய பைகளை வழங்கினார்.முக்கிய சாலைகளில் கொரோனா படம் வரைந்தும், விளம்பர பதாதைகள் அமைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.வேதாரண்யம் பகுதிகளில், உணவு கிடைக்காமல் தவிக்கும், 250 பேருக்கு ஊரடங்கு துவங்கிய நாளில் இருந்து, உணவுப் பொட்டலங்களை தொடர்ந்து வழங்கி வந்தார். தற்போது, ஊரடங்கு தளர்வால், மனநோயாளிகள், 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.மேலும், தன் பள்ளியில் படிக்கும், 56 குழந்தைகளின் இல்லங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கியவர், தலா, 1,000 ரூபாய் நிதியும் அளித்துள்ளார். இவ்வாறு, தன் சொந்த பணத்தில், 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ள இவரை, பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News