Monday, May 18, 2020

பொறியியல் படிப்புக்கு ஜூலையில் நுழைவு தேர்வு

மறைமலை நகர்; எஸ்.ஆர்.எம்., பல்கலை பொறியியல் படிப்புக்காக, ஜூலை, 30ல் துவங்கி, ஆகஸ்ட், 4ம் தேதி வரை, நுழைவுத்தேர்வு நடக்கிறது என, நிர்வாகம் தெரிவித்தது.இது குறித்து, பல்கலை நிர்வாகத்தின் அறிக்கை:எஸ்.ஆர்.எம்., பல்கலையில், பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு, வரும் ஜூலை, 30ல் துவங்கி, ஆகஸ்ட், 4ம் தேதி வரை, நாட்டில் உள்ள, 127 நகரங்கள் மற்றும் துபாய், தோஹா, மஸ்கட், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வானது, கணினி மூலமாக, இரண்டரை மணி நேரம் நடைபெறும். இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், உயிரியல் மற்றும் ஆப்டிடியூட் போன்ற பகுதிகளில் இருந்து, 125 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்படும்.அரசு அறிவுறுத்தலின்படி, தேர்வு எழுதுவோர், சமூக இடைவெளியுடன் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும் விபரங்களுக்கு, www.srmist.edu.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை மாதம், மூன்றாவது வாரத்தில், மாணவர்கள், தங்கள் ஹால் டிக்கெட்டை, டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News