கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 17 நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணிகள் ஆறு அடி இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அணியாதவர்களை பேருந்துகளில் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்க கூடாது எனவும், இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும் போன்ற விதிமுறைகளும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment