தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவை தொடங்கபடவுள்ளது. இதையடுத்து தமிழகம் 8 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் அந்த குறிப்பிட்டுள்ள மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட உள்ளன.
பேருந்துக்ளில் பயணம் செய்பவர்களுக்கு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, மாதாந்திர பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் என அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் பின்பக்க வாயில் வழியாக மட்டுமே பயணிகள் ஏற வேண்டும் எனவும், முன்பக்க வாயில் வழியாக மட்டுமே இறங்க வேண்டும் என கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பேருந்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், உட்கார வேண்டிய இருக்கைகள், உட்கார கூடாத இருக்கைகள் என்பதை குறித்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணத்துக்கு முன்பும், பின்னரும் பேருந்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் எனவும், பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களை நாளொன்றுக்கு இரண்டு முறை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பேருந்துகளில் ஏசி வசதியை பயன்படுத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment