Tuesday, May 12, 2020

பள்ளி கல்வி பாதிக்கப்படும் உலக வங்கி குழு எச்சரிக்கை


புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகில், பள்ளிக் கல்வி மற்றும் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக, உலக வங்கியின் கல்விக்குழு எச்சரித்துள்ளது. பரிந்துரை : உலக வங்கி, ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து, கல்வித்துறையில் மாற்றங்களை உருவாக்குவதுடன், பாதிப்புகளை குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே, கல்வித் துறையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து, உலக வங்கியின் கல்விக்குழு அளித்திருக்கும் அறிக்கை:வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாகவே, உலகில், 25 கோடியே, 80 லட்சம் குழந்தைகள், தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பெறாமல் இருந்தனர். சில இடங்களில், அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்படவில்லை. பள்ளிக்கல்வியின் தரம் குறைவாக இருந்ததால், மாணவர்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர்.கற்றல் பற்றாக்குறையால், பள்ளியில் இருந்து, மாணவர்கள் வெளியேறும் விகிதம் அதிகரித்திருந்தது.அந்த நிலை, வைரஸ் தொற்று பரவலுக்குப் பின், மேலும் மோசமடைந்து உள்ளது. நடவடிக்கைஅனைத்து பகுதிகளிலும், வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்த பாதிப்பினை சமாளிக்க, அனைத்து நாடுகளும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன்படி, பள்ளிகளை மீண்டும் திறக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கற்றல் திறனை ஏற்படுத் துவதும் அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'வைரஸ் தொற்றின் காரணமாக, உலகெங்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 154 கோடி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என, 'யுனெஸ்கோ' மதிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News