Sunday, May 10, 2020

தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை ! - தமிழ்க்கடலின் அன்னையர் தின வாழ்த்துகள்

"அன்னையர் தினம்", இது ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
1914 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் விடுத்த அறிவிப்பின்படி ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண் என்பவள் பூப்பெய்தும் வயதை அடைந்து, திருமண பந்தத்தில் இணைந்து, கருவுற்று தாயாகி குழந்தையை பெற்றதும் முழுமை அடைகிறாள். பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார்கள் என்றால் பெண்ணும் அதே பணியை செய்கிறாள். பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறை என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.

பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள். தான் உண்ணாமல் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய் தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள்.
தம்மை வளர்க்க தாய் பட்ட பாடுகளை மறந்த சில பிள்ளைகள் தன் தாய்க்கு ஒரு பிடி உணவு அளிக்க மனதளவில் முடியாமல் போய், அந்த தாய்க்கு மூன்று பிள்ளைகள் என்றால் மாதம் ஒருவர் பராமரிப்பது என்று கணக்கு போடுகின்றனர். அவர் இருக்கும் போது ஒரு பிடி உணவுக்கு சண்டையிட்டு கொள்ளும் சகோதரர்கள் அவர் இறந்த பின்னர் வடை, பாயாசம் என அறுசுவை உணவுகளை செய்து படைப்பதில் என்ன பயன். இருக்கும் போதே நம் அன்னையர்களை அன்பு உள்ளத்தோடு அரவனைப்போம்..

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News