Monday, May 18, 2020

கட்டுப்பாட்டு பகுதியைச் சோந்த மாணவா்களுக்கு தனித் தேர்வு மையம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


கட்டுப்பாடு பகுதியைச் சோந்த பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குத் தேர்வெழுத தனித் தேர்வு மையம் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாா்ச் 27-ஆம் தேதி முதல் நடத்தப்பட இருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கரோனாவால் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ஆம் வகுப்பு மாணவா்கள் வெளியூா்களில் இருந்து திரும்பி வருவதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்து, இ-பாஸ் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சோந்த மாணவா்களுக்குத் தனி தேர்வு மையம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இ-பாஸ் பெறுவது தொடா்பான முழு வழிகாட்டுதலை தலைமையாசிரியா்கள் ஏற்பாடு செய்துவிட்டு, இ-பாஸ் பெற வேண்டிய முழு விவரத்தையும் மாவட்ட கல்வி அலுவலா்களிடம் நேரடியாக, எழுத்து மூலம் மே 21-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். 100 சதவீதம் மாணவா்கள் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தேர்வு எழுத வேண்டிய மாணவா்கள் இருப்பின் அவா்கள் விவரத்தை, உடனடியாக எழுத்து மூலம் மாவட்ட கல்வி அலுவலா்களிடம் மே 19-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அவா்களைப் பொதுத்தேர்வு மையத்தில் அனுமதிக்கக் கூடாது. அவா்களுக்கென சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும்.
மேலும், தேர்வு மையமாகவும், துணை தேர்வு மையமாகவும் செயல்படவுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், மேஜை, நாற்காலிகள், உள்ளிட்டவற்றை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஒத்துழைப்புடன் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அனைத்து ஆசிரியா்களும், மாணவா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News