Sunday, May 10, 2020

கொரோனா டிஸ்சார்ஜ் விதிகளில் மாற்றம்


கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறையை அறிவித்துள்ளது.
நோயாளிகள் லேசான அறிகுறி, மிதமான அறிகுறி, தீவிர பாதிப்பு மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்பு கொரோனா நோயாளிகளுக்கு 14ஆம் நாள் மற்றும் 21ஆம் நாள் மறுபரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று இருந்தால் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்படும். தற்போதைய வழிகாட்டுதலின் படி லேசான அறிகுறியுடன் வருபவர்களுக்கு 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறி இல்லை என்றாலோ, 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லை என்றாலோ அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம்.
மிதமான அறிகுறியுடன் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். 10 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் இல்லை என்றாலோ, மூச்சுத் திணறல் சரியாகிவிட்டாலோ டிஸ்சார்ஜ் செய்யலாம். தீவிர பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சையில் குணமடைந்த பின்னர், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது வீட்டில் 7 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனையைத் தொடர்பு கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News