Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 21, 2020

பி.இ பட்டதாரிகளே! இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை.


மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ.சிவில் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : துணை மேலாளர்

மொத்த காலிப்பணியிடம் : 48

கல்வித் தகுதி : பி.இ.சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nhai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in/vacancies-details.htm?2242 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News