2011 ஆம் ஆண்டு டாக்டர்.புரட்சித்தலைவி அம்மா மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண்.110 - ன் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களாக நியமன அறிவிப்பு செய்து, 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் பெற்று பணி புரிந்து வருகின்றோம்.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்திற்கு ஊதியம் இல்லாத சூழலில் வாழ்ந்து வருகின்றோம், மேலும் மே மாதம் ஊதியம் இல்லாததால் எங்கள் வாழ்வாதாரத்திற்காக பல இன்னல்களிலும், ஆசிரியர் என்ற நிலையினை மறந்து தினகூலி வேலைக்கு சென்று எங்களின் நிலையினை சரி செய்து கொண்டு வந்தோம்.
ஆனால் தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் எங்கும் வெளியில் சென்று வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.
16549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்பொழுது சுமாராக 12637 பேர்தான் பணிபுரிந்து வருகிறோம். தற்பொழுது நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இந்த மே மாதத்திற்கான ஊதியத்தினை கருணை தொகையாக ரூபாய் 7,700/- வழங்கி எங்களின் வாழ்வாதரத்தினை காக்க வேண்டுமாய் மாண்புமிகு.தமிழ்நாடு முதல்வர் அய்யா அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தாங்கள் இந்த நேரத்தில் செய்யும் உதவிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம் என்று தங்களின் பொற் பாதங்களை தொட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு வெ.முருகதாஸ், மாநில தலைவர், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம்
IMPORTANT LINKS
Thursday, May 7, 2020
Home
கல்விச்செய்திகள்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான கோரிக்கை
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான கோரிக்கை
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment