Thursday, May 7, 2020

`கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டோம்!' -உரிமைகோரும் இத்தாலி நிறுவனம்


மனித இனத்தின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா என்னும் வைரஸ். சீனாவில் முதல்முதலாக இந்த வைரஸ் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது எல்லாம் எல்லோரும் அறிந்ததே. கொரோனாவுக்கென்று தனியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் தற்போதுவரை அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கவில்லை.
மருந்து
எனினும் உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. உலக அளவில் சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா மருந்தைக் கண்டுபிடித்துவிடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது.
இத்தாலியைச் சேர்ந்த டாகிஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்தை சோதனை அடிப்படையில் எலிக்குச் செலுத்தியதாகவும் கூறுகின்றனர். இந்த மருந்தைச் செலுத்தியதும் எலியின் உடலில் ஆண்டிபாடிகள் உருவானதாகவும் கொரோனா வைரஸ், செல்களில் பாதிப்புகளை ஏற்படுத்துவதை அது தடுப்பதாகவும் இத்தாலியன் செய்தி நிறுவனமான ANSA கூறியுள்ளது.கொரோனா உலக நாடுகள்
டாகிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ லூய்கி கூறுகையில், ``தடுப்பூசியை பரிசோதித்தபோது, இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை" என்று தெரிவித்ததாக ANSA தெரிவித்துள்ளது.
உலகில் கொரோனா வைரஸுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விரைவில் இந்த மருந்தை நேரடியாக மனிதர்களுக்கு செலுத்தும் ஆய்வும் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 5 விதமான தடுப்பூசிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதிலிருந்து இரண்டு தடுப்பு மருந்துகளை இறுதிக்கட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். பின்னர் இறுதி மருந்தை அதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ``எங்கள் இலக்கை அடைய, செயல்முறையை விரைவுபடுத்த உதவும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவு தேவை" என டாகிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ லூய்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News