Monday, May 11, 2020

ஒரு நபர், இரண்டு நபர் ரேஷன் அட்டைகளுக்கு அரசி அளவு குறைப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து 45 நாட்களுக்கு மேலாக மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால் தினக்கூலி பெறுபவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசு ரேஷன் பொருட்களை இலவசமாக விநியோகித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் அட்டைக்கு வழங்கப்பட்டு வந்த அரிசி 12 கிலோவில் இருந்து 7 கிலோ ஆகவும், இரண்டு நபர் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 16 கிலோவில் இருந்து 12 கிலோ ஆகவும் அரிசி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News