மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது, லஞ்ச வழக்கு உள்ளதா என, ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, அனுபவம் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும்.வரும் கல்வி ஆண்டில் பதவி உயர்வு வழங்க, 41 தலைமை ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுஉள்ளது.
இந்த பட்டியல், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது, கிரிமினல் வழக்கு, லஞ்ச வழக்கு, துறை ரீதியான விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை போன்றவை நிலுவையில் உள்ளதா; யாராவது புகார் கொடுத்துள்ளனரா என, ஆய்வு செய்து அறிக்கை தர, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
IMPORTANT LINKS
Thursday, May 7, 2020
Home
கல்விச்செய்திகள்
மாவட்ட கல்வி அதிகாரியான ( DEO ) பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு உள்ளதா? ஆய்வு செய்ய உத்தரவு.
மாவட்ட கல்வி அதிகாரியான ( DEO ) பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு உள்ளதா? ஆய்வு செய்ய உத்தரவு.
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment