Thursday, May 7, 2020

Gmail-ல் புது அம்சம் அறிமுகம்: இனி ஜிமெயில் மூலம் கூகுள் மீட் இலவச வீடியோ கால்!



கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது சில பயனர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Google Meet அனைத்து பயனர்களுக்கும்
கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை கூகுள் மீட் [Google Meet] அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. குறிப்பாக இந்த வீடியோ அழைப்பு சேவை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றி உள்ளது.
கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம்
இந்த கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியம், ஆனாலும் சில மாற்றங்களை செய்ததுடன் இணையத்தில் மற்றும் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்பாடுகள் வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?
கூகுள் காலெண்டரைப் பயன்படுத்துபவர்கள்
மேலும் கூகுள் காலெண்டரைப் பயன்படுத்துபவர்கள், அங்கிருந்து எளிதாக தொடங்கவோ அல்லது மற்றவர்களை இணைக்கவோ முடியும் என கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த கூகுள் மீட் மூலம் ஒரு வீடியோ அழைப்பில் 100பேரை பங்கேற்க அனுமதிக்கிறது.
கூகுள் மீட் பயன்பாட்டின் இலவச பதிப்பு
கூகுள் மீட் பயன்பாட்டின் இலவச பதிப்பு இந்த மே மாதத்தில் வெளியிடப்படும் என்றும், பிரீமியம் பயனர்களுக்கு முன்னர் கிடைத்த அனைத்து சேவைகளும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை
அதேபோல் கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Gmail பக்கத்தின் இடது பக்கப்பட்டியில் Google Meet ஐப் பயன்படுத்தி மீட்டிங் தொடங்குவதற்கான ஆப்ஷன் காண்பிக்கப்படுகிறது. இந்த புதிய விருப்பத்தை சில பயனர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News