Saturday, May 16, 2020

RMSA ல் இருந்து SSA ஈர்க்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய வலியுறுத்தி சென்னை மண்டல தொழிலாளர் வைப்பு நிதி நல ஆணையருக்கு கோரிக்கை!



RMSA ல் இருந்து SSA ஈர்க்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய வலியுறுத்தி சென்னை மண்டல தொழிலாளர் வைப்பு நிதி நல ஆணையருக்கு கோரிக்கை கடிதம்
ஒருங்கிணைந்த கல்வி (Samagra shiksha) திட்டம் என்பது அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் (RMSA) இனைந்து 2018 முதல் ஒருங்கிணைத்த கல்வி திட்டமாக இயங்கி வருகிறது இதில் RMSA ல் இருந்து SSA ஈர்க்கப்பட்ட கணக்காளரர், கணினி விவர பதிவாளர், கட்டிட பொறியாளர் என 150 மேற்ப்பட்ட பணியாளர்கள் மிக குறைவாக மாத ஊதியமாக மட்டும் பெற்று வருகிறோம். இத்திட்டத்தில் உடன் பணிபுரியும் 1500 பணியாளர்களுக்கும் EPF பிடித்தமானது மாதாமாதம் தவறாமல் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் 150 பணியாளர்களுக்கு மட்டும் EPF பிடித்தம் ஏதும் இல்லாமல் பணிபுரிகின்றனர். அனைத்து மாவட்டத்திலும் எங்களை போன்று பணியாளர்கள் EPF பிடித்தம் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். எங்கள் மாவட்ட அலுவலர் அவர்களிடம் மற்ற பணியாளர்கள் போல எங்களுக்கும் EPF பிடித்தம் செய்ய முறையிட்டோம் ஆனால் அவர்கள் சென்னை திட்ட அலுவலர் அவர்களின் வழிகாட்டுதல் வந்த பின்பு பிடித்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். 1 வருட காலமாக பிடித்தம் மேற்கொள்ளப்படும் என காத்திருந்தோம் ஆனால் இது நாள் வரை எந்தவிதமான பிடித்தமும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தங்களின் உதவியுடன் எங்கள் அனைவருக்கும் EPF பிடித்தம் மேற்கொள்ள வழிவகை செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ( குறிப்பு_ 2009 முதல் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தில் (RMSA) பணிபுரிந்து வருகிறோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் (RMSA) இனைந்து ஒருங்கிணைத்த கல்வி திட்டத்தில் எங்கள் பணியிடம் மறு பணியமர்வு செய்து ஆணை வழங்கப்பட்டது.)
வா.ராஜ்குமார்
மாவட்ட செயலாளர்
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் SSCSWA

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News